Skip to content

முத்துக்குமார் – வீர வணக்கம்…. முகநூல் நண்பர்களின் பதிவுகள் ….

January 29, 2012

முத்துக்குமார் – இன உணர்வாளர், ஈகி. அவரது மரண வாக்குமூலம் அவரது கோழைத்தனமான முடிவை நியாயப்படுத்தியது !

அந்த சாசணம் வெளிக்கொணாரப்படும் வரை அவரை கோழை என்று வசை பாடிய அனைவரின் வாயையும் மூடியது. அவரது ஆழ்ந்த ஈழ விடுதலையின் நியாயத்தை, இன்று தமிழ்தேசியவாதிகளே வியக்கும் வண்ணம் எடுத்துரைத்த அந்த ஈகி உயிருடன் இருந்து இருக்க வேண்டியவர் என்று வருந்தாதவர் எவறும் இல்லை. அந்த மகத்தான தமிழ் இன உணர்வாளரை போற்றி புகழ் பாடுவதோடு நில்லாமல் அந்த வீரனின் பெற்றோர் மற்றும் சகோதரியின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் ஆன உதவிகளை செய்வதே சரியானதாக இருக்கும். அதை யார் முன்னெடுத்து செய்வார்கள்?

மன்னை முத்துக்குமார்

——————————————————————————-

வீர திருமகன் முத்துக்குமார் நினைவு நாளில் அனைவரும் கூட்டம் போட்டு தன் இன உணர்வுகளை வெளிகாட்டுகிற நேரத்தில் அவர் உயிர் நீத்த சாஸ்த்ரி பவன் இருக்கும் இடமான ஹாட்டௌஸ் சாலைக்கு முத்துகுமரனின் பெயரை சூட்ட சொல்லி ஹட்டௌஸ் சாலையில் மறியல் செய்து கைதாகி அரசிடம் தொடர்ந்து 3 ஆண்டாக வேண்டுகோள் வைக்க அழைக்கிறோம்!! இந்த செயலை கூட்டம் போடுகிற அனைத்து இனமான தோழர்களும் ஒருங்கே சொல்வதின் மூலம் அரசின் கேட்காத காதுகளுக்கு புரிய வைப்போம்!!

அமைப்பு கடந்து, சாதி கடந்து, மதம் துறந்து, கட்சி மறந்து தமிழனாக மனிதனாக அந்த தியாக செம்மலின் பெயரை அந்த சாலைக்கு பெயராய் வைக்க போராடுவோம்!! தொடர்ந்து இதற்காக போராடி வரும் வரும் தமிழர் எழுச்சி இயக்கத்தின் தோழர்களை பாராட்டுவோம்!! தயவு கூர்ந்து ஒற்றுமையாய் இந்த செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நோக்கி ஒத்த கருத்தில் இணைவோம்!! போராட்ட களத்திற்கு வர தயாராய் இருப்போர் தொடர்பு கொள்ள : 9710854760

Thamizh Selvan

——————————————————————————-

மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது.. ஆனால் என்னளவில் முத்துக்குமார் தன் உடலில் பற்ற வைத்த நெருப்பின் எச்சத்தை எப்போதும் என் கோடுகளில் வைத்திருக்க ஆசைப்படுகிறேன்.
வீர வணக்கம் தோழனே..

நீ பற்ற வைத்த நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வோம் ..

Muthukumar - Jan 29

——————————————————————————-

எனது அண்ணன் முத்துக்குமார் உயிராயிதம் ஏந்துவதற்கு முன்னதாக எழுதிவைத்த,

விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை…

என்று தொடங்கும் கடிதத்தை ஆண்டுகள் 3 கடந்த பின்னர் படிக்கும் போதும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை.

வீரவணக்கம்.

——————————————————————————-

நம் பிறப்பு சாதரணமாக இருக்கலாம்…
ஆனால் நம் இறப்பு சாதரணாமாக இருக்க கூடாது……என்பதை நிரூபித்த ……….

தன் இறப்பின் மூலம்…ஒரு இனத்தையே உலுக்கிய அந்த தங்க மகனுக்கு இன்று நினைவஞ்சலி………….

பலருக்கு சாட்டயடி
பலருக்கு பாடம்
பலருக்கு இழப்பு
பலருக்கு கண்ணீர்
பலருக்கு ஆற்றாமை என அனைத்தையும் தந்த அந்த இறப்பு…… தமிழனின் வரலாற்றில் ஒரு அதிர்வலை……

உற்றார் உறவினர் நண்பர் அழலாம்………ஆனால் ஒரு இனமே அழுத பாக்கியம் உனக்கு மட்டும் தானய்யா சொந்தம்….ஆம் இன்று தமிழினத்தின் தங்க மகனாம் முத்துக்குமரனுக்கு நினைவலை……….

நாங்கள் தமிழர் என்பது உண்மையானால்…என்றாவது ஒரு நாள் ஒரு தமிழ் உணர்வாளன் ஆட்சி பீடம் ஏறுவான்…அன்று சென்னையின் மைய பகுதியில்…உன் நினைவாக மாவீரர் சதுக்கம் எழுப்புவோம்….

——————————————————————————-

Martyr.Muthukumars Demand no #9
” When the Tigers were weakened militarily, the Upcountry Tamils were targetted, and it is feared that in the future that area might be subjected to a major genocidal pogrom. So, a referendum must be conducted among the Upcountry Tamils to know whether they want to join Tamil Eelam. In this matter, the decision of the Upcountry Tamils shall be final. ”
A vision hardly seen in the so-called tamil-indian intelligentsia who creates hue & cry about the rights of marginalized people of Srilanka.

We bow our heads and Salute our Leader. – MAY 17 movement.

——————————————————————————-

தமிழ் இளைஞர்களின் முகவரியான முத்துக்குமாருக்கு வீரவணக்கம் சாகும் தருவாயில் உன் சாதி என்னவென்று கேட்டதற்கு ”தமிழ்ச்சாதி” என்று இறுமாப்புடன் சொன்ன நம் தலைவன் மாவீரன் முத்துக்குமாரின் கோரிக்கைகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மாபெரும் போராளியாய், வரலாற்றில் நிற்கக் கூடிய அந்த மாவீரன், எங்களைப் போன்று ஒராயிரம் இளைஞர்களை பிடரியில் அடித்து களத்திற்கு விரட்டியவன்.

அவன் கோரியதைப் போல அவன் ஒரு ஆயூதமாக பயன்படுத்தப்பட்டு, கோட்டைகளை தகர்த்தெரிய அவனுடல் பயன்படுத்தப்படமுடியாமல் போன அந்தக் காட்சிகள் நம் கண்முண்ணே இன்றும் நிற்கின்றன. திரண்டு எழுந்த மக்கள் கூட்டத்தை, மாற்றத்திற்காய் பயன்படுத்தப்படமுடியாமல், அதிகார பீடங்களை உடைத்தெறிய ஒன்றினைக்காமல் திணறிய புரட்சியாளர்களையும், கோபம் கொண்ட இளைஞர்களை கண்டு திகைத்து நின்ற அரசியல்வாதிகளையும் வரலாறு கண்டது.

நம் எழுத்தையும், பேச்சையும் நடைமுறையாய் மாற்ற இயலாத ஒரு வார்த்தைக் குவியல்களாய் உதிர்ந்து விழுந்ததை கண்ட கணங்கள் அவை. இளைஞர்கள் கைப்பற்றிய முத்துக்குமாரின் உடல்; இளைஞர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட முத்துக்குமாரின் உடல் என்று வரலாறு சரிந்ததை நாம் கண்டோம். அனைத்தையும் வெல்லும் ஆயுதத்தை நாம் அனைவரும் கூடி எரித்த நாள் அந்த நாள். துனீசியாவில் எரிந்த இளைஞன் ஏகாதிபத்திய அடிமை அரசுகளை எரித்த புரட்சியை கடந்த வருடம் உலகம் கண்டது. போரிடும் வாளை மூலையில் சாத்தி, அதை சம்பிரதாய சடங்காக்கிய வல்லமையை தமிழரிடத்தில் இன்று உலகம் காண்கிறது. அவனது உடல் 2009மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் முதன்முறையாய் எரிக்கப்பட்டது.

அவன் எதற்காய் பதைபதைத்தானோ, நாம் மரங்களென நிற்க அது நம் கண்முண்ணே நடந்து முடிந்தது. நாம் முத்துக்குமாரை ஏமாற்றினோம் என்பதற்கான சாட்சியாய் இனப்படுகொலை இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது. முத்துக்குமார் இறுதியில் உரைத்த “தமிழ்ச்சாதி” நேற்று பரமகுடியில் தோற்றது. கோரிக்கைகள் மாறவில்லை. எதிரிகள் தோற்கவில்லை. துரோகிகள் தண்டிக்கப்படவில்லை. தமிழர்கள் பாதுகாக்கப்படவில்லை. தமிழீழ கோரிக்கை சர்வதேசத்தால் நேசிக்கப்படவில்லை.

நமது எதிரிகள் அடுத்தக் கட்ட நகர்வை முன்னெடுத்துவிட்டார்கள். நமது அரசியலை பின்னுக்குத் தள்ளுகிறார்கள். நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள். இதற்காகத் தான் இளைஞர்களிடத்தே மாற்று அரசியலை முன்னெடுக்கச் சொன்னான் முத்துக்குமார். உலகஅரங்கில் தமிழர்கள் ஆகப்பெரும் பலம் வாய்ந்த சர்வதேச இனமாய் நிற்க வேண்டும். உலகின் ஒவ்வொரு மூலையில் வாடும் தமிழர் துயர் துடைக்க நமது சர்வதேச ஆற்றல்களை ஒருங்கிணைக்கும் கூடாரமாய் நம் இளைஞர்கள் மாறவேண்டும். நாம் ஒவ்வொருவரும், நமது ஒவ்வொரு நாளிலும் குறைந்தபட்ச நேரத்தை தமிழர்களின் அரசியல் – சமூக – பொருளாதார கட்டமைப்புகளை கட்டி எழுப்ப பயன்படும் வேலைகளுக்கு செலவிடுவோம் என்று இன்று சூழுரைப்போம்.

ஒன்றினைந்து நிற்கும் இந்திய-பார்ப்பன-இலங்கை கூட்டின் சதித் திட்டங்களை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழினமும் தனக்கான எதிர்கால அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படை வேலையாகும். இந்தக் கூட்டணியை உடைக்காத தமிழ்ச்சமூகம் தனது அரசியலை ஒரு போதும் சாத்தியப்படுத்திவிட முடியாது. உருவாகிவரும் தமிழ்பார்ப்பன-அமெரிக்க ஒத்துழைப்பு நடவெடிக்கைகளை நம் சமூகம் ஊன்றி கவனித்து அதை முறியடிப்பதை முதற்கடமையாக கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க சர்வதேசத்தில் எந்த சக்திகள் முயன்றனவோ அதே சக்திகள் இன்று தமிழரிடத்தின் நலனில் அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டு நகர்வதை நம்புவதற்கான முட்டாள் சமுதாயமாக நாம் மாறாமல் இருக்க வேண்டுமானால், இளைஞர்கள் நாம் பல்வேறு வேலைகளை பல்வேறு தளங்களில் முன்னெடுக்க வேண்டும்.

இதுவே நம் தலைவன் முத்துக்குமாருக்கு நாம் அளிக்கும் மாபெரும் வீரவணக்க நிகழ்வாகும். தனது சாவிற்கு, நம்மை அழைத்த முத்துக்குமார் நமது கையில் கொடுத்துச்சென்றது தமிழ்க்குழந்தைகளின் எதிர்காலத்தை. அரசியல்-சமூக-பொருளாதார விடுதலையை பெற்றச் சமூகத்தை நாம் அவர்களுக்காய் உருவாக்க வேண்டும். நமது குறிக்கோளை முத்துக்குமார் வரையறுத்தான். நமது அரசியல் அறிவிற்கான தேடலை முத்துக்குமார் தொடங்கி வைத்தான். ”இயக்கமாவொம்” என்று நம்மைச் சொல்லவைத்தான். நமது அடையாளமாய் முத்துக்குமார் மாறினான்.

அரசியலை முகமறியா சாமானியர்கள் முன்னெடுப்பதை சாத்தியப்படுத்தினான் நம் தோழன். சாதியை முறிப்போம்; நாம் தமிழ்ச்சாதியாவோம். இனவெறி மாய்ப்பொம்; நம் இனவிடுதலையை முன்னெடுப்போம். வசனங்கள் தவிர்ப்போம்; செயல்களில் இறங்குவோம். எதிரிகளின் பலத்தை வீழ்த்துவோம்; ஒவ்வொரு தினமும் தமிழர் நாம் வலிமையாவோம். உலகெங்கும் நிகழும் தேசிய இனஎழுச்சியை ஆதரிப்போம், நம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம். முத்துக்குமாரின் இந்த மூன்றாமாண்டு தினத்தில் நமது வீடுதோறும் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

முத்துக்குமாரின் புகைப்படம் நமது வீதிதோறும் பொது மக்களின் வணக்கத்திற்காக வைப்போம். முத்துக்குமாரின் இந்த தினம் தமிழரின் எழுச்சித்தினமாய் வரலாறு அறியட்டும். சாமானிய மக்களாகிய நாம், மக்கள் அரசியலை முன்னெடுப்போம். நம் தோழனின் வீரவணக்க நிகழ்வை நாம் தான் வீதிதோரும் முன்னெடுக்க முடியும், அதுவே நமது கடமையாகும். ஊர்தோரும், வீதிதோரும், முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வு நிகழட்டும். தமிழர்கள் வாழும் ஓவ்வொரு வீதியிலும் முத்துக்குமாரின் புகைப்படம் நிற்கட்டும், தமிழர்களை வழிகாட்டட்டும் தமிழர்கள் நாம் வெல்வோம். மே பதினேழு இயக்கம்.

Thirumurugan Gandhi

——————————————————————————-
தமிழ் சொந்தங்கள் உயிர் காக்க தன் இன்னுயிர் நீத்த முத்துக் குமரனுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் – ராஜ்குமார் பழனிசாமி
Muthukumar - Jan 29
உன் தியாகத்தால் திடுக்கிட செய்தவனே..
உனக்கு பல ஆயிரம் கைகள் கூடி
வணக்கங்கள் வீரமாக கூப்பினாலும்
எங்கள் கரம் தன்னில் கறைகள்
ஆயிரம் உண்டு…
——————-
தணல் தமிழா !! முத்து குமரா !!
நாங்கள் இழந்த வீரத்திற்கு
வித்தாகி போனாயே..
உன்னை இழந்து இழந்த
உரிமையை மீட்டெடுக்க மரித்தவனே…
உயிரை கொடுத்து உணர்வை
மீட்டி மீள செய்தவனே !!!!
குன்றில் நின்ற விளக்காய் எரிந்து சென்றாயே..
உன் தியாகத்தால் திடுக்கிட செய்தவனே..
உனக்கு பல ஆயிரம் கைகள் கூடி
வணக்கங்கள் வீரமாக கூப்பினாலும்
எங்கள் கரம் தன்னில் கறைகள்
ஆயிரம் உண்டு…
உன் இழப்புக்கு ஈடு செய்ய
ஈடாக உன்னை தொடர இழப்புகள் பல..
இத்துணை மரணத்திற்கும் மறுபதில் மறுப்பை
தவிர மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை..
இனி மரணித்து அல்ல !!! மரணம் விளைவித்தே
உணர்ப்பிக்க முடியும்,,
ஏனெனில் இது வரை இழப்பு எம்மில் மட்டுமே…..
தை திங்கள் பதினைந்து..போனது உன்னுயிர் மட்டுமல்ல !!!
——————————————————————————-
முத்துக்குமாருக்கு வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் செய்கின்றோம் – ஜனவரி 29
எங்களுக்கு என்று ஒரு நாள் இரு தேசம் பிறக்கும். அன்று சாஸ்திரி பவன் முத்துக்குமார் இல்லமாகும். அங்கு அவனுக்கு நாம் சிலை எழுப்புவோம் கோட்டம் கட்டுவோம். எம்மை அழித்தவனின் கொட்டம் அடக்குவோம்.
தூங்கிகொண்டு இருந்த எம்மீது தீயை தெளித்து எழுப்பியவனே உன்கனவு நினைவேற பாடுபடுவோம்.
வீரவணக்கம் வெறும் வணக்கம் அல்ல. வீழ்ந்த எம்மினம் எழும்வணக்கம்.
எழுக தமிழினமே எழுக… எழுக தமிழகமே எழுக…
எழும் எங்கள் ஈழம்,.. தமிழீழம்…
மாவீரன் முத்துக்குமார் புகழ் ஓங்குக!!!…
——————————————————————————-
“அன்பு அண்ணன்
தமிழின் இனிமை போல
இனிப்பானவர்….
நெல்லி கனி போல்
கருணையும் கண்டிப்பையும்
கொண்ட இரு குணம் கொண்டவர்…
அன்பு தேசத்தின்
முடி சூடா மன்னன்..
எங்கள் நட்பிற்கு கிடைத்த
அருமை அன்பு அண்ணன்..
பாசம் பயிர் செய்யும் வற்றாத ஜீவ நதி..
எங்களை நாட வைக்கும் நெல்லை சீமை,,
அதனால் நாங்கள் கொடுப்போமே அன்பு சுமை..
சுகமாய் என்றும் இருப்போம் உங்கள் அரவணைப்பில்..
அகவை முப்பத்திஆறில் அடிவைக்கும்..
அண்ணா…
வாழ்த்த வயது குறைவதால் வணங்கி வாழ்த்துகிறேன்…
இந்த சொந்தம் இன்று போல்
உங்கள் நூறாவது வயதிலும்
வாழ்த்துரைக்க வரம் வேண்டுமென
நம்மை இணைய வைத்த
ஆண்டவனை நேசிக்கிறேன்…”
——————————————————————————-
Muthukumar - Jan 29
நீ நம் இனத்துக்காக எனக்கும் சேர்த்து செய்துவிட்டாய்..
நீ செய்ததற்காகவே நான் செயல்படுகிறேன்…
நீ சாம்பலாகிபோன அன்றிலிருந்து
உன் கனவு என் வேலை..
உன் ஆசை என் பணி..
உன் எண்ணம் என் செயல்..
உன் கோரிக்கை என் அரசியல்…
உன் ஏக்கம் நோக்கி என் ஓட்டம்..
அநீதிக்கு எதிராக தீயை சுமந்ததால் என் சகோதரானவனே, என் சகோதரர்கள் அறிவாயுதம் ஏந்தி இருக்கிறார்கள் என்ற உன் நம்பிக்கை என் முழு வாழ்க்கை..

உன் தாகமும், தமிழர்களின் தாகமுமாம் தமிழீழத்தாயகம் அடையவும, தமிழர் வாழ்வு மேன்மை அடையவும் அறிவாயுதம் ஏந்தி போரிடுவேன் என்று உறுதி கூறுகிறேன்..

தமிழர்களின் தாகம்.. தமிழீழத்தாயகம்..

——————————————————————————-
உன்னை தீபமாக்கி எங்களின் இருண்ட கண்களுக்கு ஒளி தந்தாயே…!! உனக்கு ஒரு வீரவணக்கம் மட்டும் சொன்னால் என் மனம் ஆறுதல் அடையாது..!! உனது கனவுகள் மெய்ப்பட ஈழத்தை உனக்கு காணிக்கையாக்குவோம்..!! இது சத்தியம்..!!
——————————————————————————-

ஈழத்துக்கு தீபன், தமிழகத்துக்கு முத்துகுமார்.

மாவீரர்கள்,முத்துகுமார், செங்கோடி இவர்களின் தியாகத்தால் என்றும் அணையாத நெருப்பாக இருந்து கொண்டிருக்கிற்து தமிழின தாகம்.

இன்று முத்துகுமார் அவர்களது நினைவு நாளில் முத்துகுமாருக்கு எமது வீரவணக்கம்.

——————————————————————————-

MVI : Rename the ” KILPAUK GENERAL HOSPITAL” as a “MUTHUKUMAR GENERAL HOSPITAL”..

MVI:  Let all Tamilans Put pressure on the Tamil Nadu Government to Rename the ” KILPAUK GENERAL HOSPITAL” as a “MUTHUKUMAR GENERAL HOSPITAL”..

Muthukumar was not brought dead but had his last breath at Kilpauk hospital after giving the famous statement….

From – vizhithezhu iyakkam, Mumbai

Srithar Tamilan

——————————————————————————-
Muthukumar - Jan 29
//உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத்தம்பி முத்துகுமாரனுக்கு என்றுமே அழியாத இடம் உண்டு : விடுதலைப்புலிகள்//
——————————————————————————-
ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்…அந்த
ஆழக்கடலை காலால் அளக்க முடியும்…
பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்…
கரும்புலிகளை இங்க யாரால்
அளக்க முடியும்…கரும்புலி இதயம் இரும்பென
எழுதும்
கவிதைகள் பொய்
ஆகும்
அது இரும்பினிலில்லை அரும்பிய
முல்லை என்பதே மெய் ஆகும்சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே
யாருக்குமே உடல் வேர்க்கும்…
அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில்
சாவுக்குத்தானெடா வேர்க்கும்
வளர்த்த கோழி உரித்திடாத
வாழ்வை எடுத்தவர்
அவர் படுக்கும் பாயில் வளர்க்கும்
நாயை கிடக்க விடுபவர்…காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை
யாருக்கு இங்கே இது தெரியும்…
கரும் வேங்கைகள்
தாகங்கள் ஏதென தாங்கிடும்
வேர்களுக்கே இது புரியும்…
இலக்கை நோக்கி நகரும் போதும்
கணக்கை பார்ப்பவர்
அவர்
வெடிக்கும்
போதும்
அனுப்பும்
தோழர்
உறவை காப்பர்
——————————————————————————-

Muthukumar - Jan 29மாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்

தூத்துக்குடி மாவட்டம் கொழுவைநல்லூர்  கிராமத்தில் பிறந்தவர் அண்ணன் முத்துக்குமார். எனது கிராமத்தின் மிக அருகில் உள்ள கிராமம்.

என்னை விட ஐந்து வயது மூத்தவர். அவர் படித்த பள்ளியில்தான் (TDTA High School, Maranthalai) நான்  படித்தேன்.

சிறுவயதிலேயே மிகுந்த தமிழுணர்வு கொண்டவர். எப்போதும் மிக அமைதியாகவே இருப்பார். எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்.

தூய தமிழில்தான் பேசுவார். இது அப்பள்ளியில் படித்த பலருக்கும் தெரியும். இதனை வைத்து அவரை கேலி செய்தவர்களும் உண்டு.

ஆனாலும் தன மனந்தளராமல் தூய தமிழில் பேசுவதை தொடர்ந்தார். தமிழ் நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

பள்ளி நாடகம் ஒன்றில் முனிவர் வேடமிட்டு அவர் வீரவசனம் பேசியது நன்றாக ஞாபகம் இருக்கிறது..

படிப்பிலும் மிக திறமைசாலி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் மாணவனாக திகழ்ந்தார்.

இவரது வகுப்பில் எப்போதும் இவர்தான் வகுப்புதலைவராக இருப்பார். அந்த அளவிற்கு அனைத்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நல்லபெயர் எடுத்தவர்.

அவரது கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்குபெற்று உரையாற்றுவார். தமிழ் நாடகங்களை சிறுவர்களுக்கு சொல்லிகொடுத்து நடிக்க சொல்லுவார்.

ஏழ்மையின் காரணமாக பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை. அதன்பின்னர்தான் அவர் சென்னை வந்தார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குள் இருந்ததாகவும்,  ‘பனைமரம்’ என்னும் சிறுதொடர் எழுதியுள்ளதாகவும் அவரது நண்பர் ஒருவர் என்னிடம் சமீபத்தில் கூறினார்..

பின்னர் சில ஆண்டுகள் அவரை நான் பார்க்கவே இல்லை. நானும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வந்து சேர்ந்தேன்.

நான் படித்த கல்லூரியில் அண்ணன் முத்துக்குமார் அவர்கள் காவலாளியாக வேலை பார்த்துகொண்டிருந்தார். பார்த்தவுடன் கண்கலங்கியது..

அவர் தானாகவே முன்வந்து என்னிடம் நலம் விசாரித்தார். சில நிமிடங்கள் பேசிக்கொடிருந்தோம்.

நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கும் காவலாளியாக வருவார். அப்போதும் பேசிக்கொண்டோம்.

அப்போது ‘C Programming’ என்னும் கணிப்பொறி  மொழியை  யாருடைய உதவியும் இன்றி அவராகவே படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அதை படிப்பதற்கு திணறுவார்கள்.  மிக எளிமையாக அதனை கற்றுக்கொண்டு, என்னிடமும் விளக்கினார்.

அவ்வாறு கற்கும் ஆர்வமும், கற்பிக்கும் ஆர்வமும் அண்ணன் முத்துக்குமாரிடம் அதிகம் இருந்தது.

அண்ணன் முத்துக்குமாரிடம் எந்த அளவிற்கு தூயத்தமிழ் பேசுவாரோ, அதே அளவிற்கு தூய்மையாக ஆங்கிலமும் பேசுவார். வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும், ‘வார இதழ்’ ஒன்றில் வேலை செய்வதாகவும் சக காவலாளி ஒருவர் கூறினார்.

பின்னர் இரண்டு ஆண்டுகள் அவரை பார்க்கவே இல்லை. பின்னர் அவரது படத்தை தினத்தந்தி   செய்தித்தாளில்தான் பார்த்தேன். மிக அதிர்ச்சி அடைந்தேன்.

ஆம்,  ‘இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தூத்துக்குடி வாலிபர் தீக்குளித்து மரணம்’.

என்ன செய்வது என்றே தெரியவில்லை. மறுநாளே கல்லூரிகளையும் விடுதிகளையும்  மூடச்சொல்லி அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.

மிகுந்த துயரத்தோடு தூத்துக்குடிக்கு சென்றேன். அவரைப்போன்ற தமிழுணர்வாளர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.

அவரோடு பழகிய சிலநாட்களில்  ஒருமுறைகூட அவர் தமிழ் பற்றியோ, தமிழ் ஈழம் பற்றியோ, விடுதலைப்புலிகள் பற்றியோ என்னிடம் பேசியது கிடையாது.

அவர் இறந்தபின்னர் அவரது மரண அறிக்கையை படித்த பின்னர்தான் அவரது தமிழுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

அவர் ஏற்றிவைத்த புரட்சித்தீயில் என் போன்ற இன உணர்வற்றவர்கள் விழித்துக்கொண்டோம். முத்துக்குமாரின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் உள்ளது.

அவரது தியாகத்தை கொச்சைபடுத்தும் சில மூடர்களும் நம் மண்ணில்  இருப்பது மிக வருத்தம்..

தமிழர்களே, கொஞ்சமாவது இன உணர்வு கொள்ளுங்கள். இங்குள்ள எந்த அரசியல்வாதியையும் நம்ப சொல்லவில்லை.. ஈழம் நம் பூமி என்பதை மட்டும் நம்புங்கள், ஆதரியுங்கள். ஈழம் அடைந்தே தீர வேண்டும்

——————————————————————————-
இந்திய தேசிய கோயிந்தாகவும், ஏதோ ஒரு சாதிக்காரனாகவும், ஒரு நடிகனின் ரசிகனாகவும், ஏதோ ஒரு சாமியின் பக்தனாகவும், ஒரு கட்சியில் உடன்பிறப்பாகவும் என்னை நானே முடக்கிபோட்டிருந்த என் ‘இரைத்தேடி விட்டில் பூச்சி’ வாழ்கையை தீயிட்டு கொளுத்தி என் இன எதிரியின் கருவறுக்க என்னை போராளியாக்கி எனக்கு போர்க்கவசம் பூட்டி சாதியையும், இன எதிரிகளையும் தீயிட்டு கொளுத்து என்று சொல்லி தன்னை தானே சுட்டுப்பொசுக்கும் தீக்கு தின்னக்கொடுத்த என் அண்ணன் மாவீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!!
——————————————————————————-
Muthukumar - Jan 29
உறங்கிகிடந்த தமிழ் பிணங்களை தட்டி எழுப்பிய தியாக சுடர்
——————————————————————————-
தூங்கிய தமிழனை தட்டி எழுப்ப தீ நாக்கிற்கு தன்னையே இரையாக்கி, இன்று தாய்தமிழகத்தில் அனைவரும் புலிக்கொடியை ஏந்துவதற்கு துனிச்சலையும், தமிழ் தேசியத்தை முழங்குவதர்க்கு தைரியத்தையும் கொடுத்த தமிழ்தேசிய தியாகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்!!!
——————————————————————————-
விழுந்துவிட்ட
தமிழனுக்காய்
கொழுந்துவிட்டு
எரிந்தவனே
கொஞ்சம்
நெருப்பைக்கொடு
காங்கிரஸ் கட்சியை
எரித்துவிட்டுத்தருகிறான்
——————————————————————————-
என்றாவது ஒரு நாள் ஒரு தமிழ் உணர்வாளன் ஆட்சி பீடம் ஏறுவான்…அன்று சென்னையின் மைய பகுதியில் உன் நினைவாக மாவீரர் சதுக்கம் எழுப்புவோம்….///**** இது உணர்ச்சியின் பிதற்றல் அல்ல, ஒவ்வொரு உணருவுள்ள தமிழனின் உறுதிமொழி, உன் கனவை மெய்ப்பிப்பதே என்னை போன்ற உணர்வாளர்களின் லட்சியம், உன் தியாகாத்ிர்க்கு எங்கள் சிரம் தாழ்ந்த மரியாதை
——————————————————————————-
தன்னுயிர் ஈந்த மாவீரன் முத்துகுமாருக்கு வீர வணக்கங்கள்**
ஈகையில் சிறந்தவள் தாய்
பெற்ற தாய் தன் குழந்தைக்காக தன் உயிரையே கொடுப்பாள்தமிழ் இனவாழ்வுக்காக தன்னையே தந்து தாயைவிட, கடவுளைவிட சிறந்தவனாக விளங்குகிறார் மாவீரன் முத்துகுமார்.எட்டுத்திக்கும்,
முத்துகுமார் புகழ் பரவட்டும், புரட்சி ஒங்கட்டும்
ஒற்றுமை ஒலிக்கட்டும்
——————————————————————————-

One of the Demands for Martyr.Muthukumar who self-immolated to stop the Genocidal war on Tamils in 2008-09

“Because the UN Secretary General Ban Ki Moon is always functioning with a bias towards his homeland China, he must not be given the power to take any decision regarding Eelam.”

Though he was wrong in identifying the BanKi Moon’s nativity, his prediction on Ban Ki Moons’ intent stood the time. No wonder why thousands of tamil youths accepted him as their leader, though they knew him only after his death.Now it is more evident that to Punish the Criminals of Tamil Genocide, one has to first punish Mr.Ban Ki Moon for protecting the criminal Govt Of Srilanka.

Thirumurugan Gandhi

——————————————————————————-

In his final demands Martyr Muthukumar

… “While the International Community shall have the right to recognize Tamil Eelam which is going to be formed, only the people of Tamil Eelam shall have the right to decide under whose leadership it should be formed.”He is absolutely right in understanding vested interests of so-called International Community who mastered the art of making puppet govts across the history.

We are proud to be his followers – MAY 17 movement

——————————————————————————-
இன விடுதலைக்கான போராட்டத்தை உயிர்ப்பிக்க செய்த உயிர் தியாகம் உடனடியாக போய் சேராமால் மழுங்கடிக்கப்பட்டாலும், இதன் தாக்கம் என்னை போன்றவர்களின் உள்ளத்தில் ஊடுரவ செய்திருக்கிறது.. முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தின் நோக்கம் என் சம காலத்திலோ அல்லது அடுத்த தலைமுறையிலோ நிறைவேறும். நிச்சயம் நிறைவேறும்,அன்று நீ விதைத்தாய் … விதையாக பரவி கிடக்கிறோம் என்று மட்டும் நினைக்காதே மரமாகும் வரை வேர்கள் கண்ணுக்கு தெரியாது…வீர வணக்கம்! வீர வணக்கம்! முத்துகுமாருக்கு வீர வணக்கம்!
Advertisements
Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: